Jul 2, 2009

Nee Indri Naanum Illai (நீ இன்றி நானும் இல்லை)

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமாவருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?


விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...


சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. .. (2)

I don’t exist without you
My love is no false
I see your face all my way
pain can also be pleasure here

Twilight sky is getting red

Distance is coming down
I come closer to you when you show signs of melting
I will never move out of you
I will not move an inch also out of you
Longing to see your face, my sweet breeze

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

I don't exist without you
My love is no false
When will i see you
When will my eyes feel heavenly?

Fingers and eyes are getting sore

Flying time also tones / pangs down
Still, I will make it
To take nap on your lap
You will envy me now, gentle breeze
As I came closer to her in my dreams

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
வரிகள்:
தாமரை

Mar 6, 2009

தாமரையின் கவிதைகள்!!

தாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………

வலி

ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..
எதிர்வினை
‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?
வீடுநண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!

மழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…

எல்லாம் சரி…
தண்டாயுதபாணி கோயிலுக்குப்
போகும் நடைபாதையில்
பழைய சாக்கு விரித்து
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரைவயிற்றிக் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
சூடம் விற்கும்
தாயம்மா கிழவியை
நினைத்தால்தான்..

ஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….

யார் அடிப்பது மனசின் ஒட்டடை?

நியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…

கனவுகள் கண்டு
கொண்டுநான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு
கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு…
இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ…
நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்..

அந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…

முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்…
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை…
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை…
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!

புத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…

ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….

குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை

Mar 3, 2009

எங்கிருந்து வந்தாயடா?

எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க

இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை

ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது

விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)

திரைப்படம் : 5 ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா
இசை : பரசுராம் ராதா
பாடல் இயற்றியவர்: தாமரை

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை
அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம் வரை செல்லுவேன்
விடிந்தாலும் விடியாத
பொன் காலையைக் காண காத்திருப்பேன்
(காதல்..)

எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல் த்ட இனிக் கிள்ளுமோ
அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும்
நல்வாழ்வின் வனவாசம்

காதல் கொஞ்சம்..
காதல் கொஞ்சம்..
காற்று கொஞ்சம்..
காற்று கொஞ்சம்..
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம்..
தூரம் எல்லாம்..
தூவானமாய் தூவும் மழை

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம்
வேண்டாம் நிலவோடு தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
(காதல்..)

லாலா லாலா
லாலா லாலா
லாலா லாலா
லாலா லாலா

காதல் கொஞ்சம்.. ஓ...
காற்று கொஞ்சம்.. ஓ..
காதல் கொஞ்சம்.. ஓ..
காற்று கொஞ்சம்.. ஓ..

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
மண்..
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீ நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையில் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே என்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கரு கரு..)
(தாமரை..)
(தாமரை..)
ஒரு மல்லிச்சரமே...

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை