Jul 2, 2009

Nee Indri Naanum Illai (நீ இன்றி நானும் இல்லை)

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமாவருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?


விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...


சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. .. (2)

I don’t exist without you
My love is no false
I see your face all my way
pain can also be pleasure here

Twilight sky is getting red

Distance is coming down
I come closer to you when you show signs of melting
I will never move out of you
I will not move an inch also out of you
Longing to see your face, my sweet breeze

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

I don't exist without you
My love is no false
When will i see you
When will my eyes feel heavenly?

Fingers and eyes are getting sore

Flying time also tones / pangs down
Still, I will make it
To take nap on your lap
You will envy me now, gentle breeze
As I came closer to her in my dreams

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
வரிகள்:
தாமரை

Mar 6, 2009

தாமரையின் கவிதைகள்!!

தாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………

வலி

ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..
எதிர்வினை
‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?
வீடுநண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!

மழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…

எல்லாம் சரி…
தண்டாயுதபாணி கோயிலுக்குப்
போகும் நடைபாதையில்
பழைய சாக்கு விரித்து
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரைவயிற்றிக் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
சூடம் விற்கும்
தாயம்மா கிழவியை
நினைத்தால்தான்..

ஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….

யார் அடிப்பது மனசின் ஒட்டடை?

நியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…

கனவுகள் கண்டு
கொண்டுநான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு
கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு…
இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ…
நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்..

அந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…

முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்…
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை…
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை…
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!

புத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…

ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….

குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை

Mar 3, 2009

எங்கிருந்து வந்தாயடா?

எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க

இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை

ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது

விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)

திரைப்படம் : 5 ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா
இசை : பரசுராம் ராதா
பாடல் இயற்றியவர்: தாமரை

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை
அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம் வரை செல்லுவேன்
விடிந்தாலும் விடியாத
பொன் காலையைக் காண காத்திருப்பேன்
(காதல்..)

எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல் த்ட இனிக் கிள்ளுமோ
அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும்
நல்வாழ்வின் வனவாசம்

காதல் கொஞ்சம்..
காதல் கொஞ்சம்..
காற்று கொஞ்சம்..
காற்று கொஞ்சம்..
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம்..
தூரம் எல்லாம்..
தூவானமாய் தூவும் மழை

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம்
வேண்டாம் நிலவோடு தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
(காதல்..)

லாலா லாலா
லாலா லாலா
லாலா லாலா
லாலா லாலா

காதல் கொஞ்சம்.. ஓ...
காற்று கொஞ்சம்.. ஓ..
காதல் கொஞ்சம்.. ஓ..
காற்று கொஞ்சம்.. ஓ..

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
மண்..
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீ நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையில் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே என்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கரு கரு..)
(தாமரை..)
(தாமரை..)
ஒரு மல்லிச்சரமே...

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை

ஒரு மாலை இளவெயில் நேரம்

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே.. கண்டேனே...
(ஒரு மாலை..)

பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே
(ஒரு மாலை..)

பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தேனே
தடுமாறி போனேனே
(லா லா....)
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
(அவள் அள்ளி விட்ட..)

படம்: கஜினி
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்:
தாமரை

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே..
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
(பொய் சொல்ல..)

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே
(பொய் சொல்ல..)

உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள..
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை..
இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும்
மரம் சொல்லுமே
(பொய் சொல்ல..)

படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்:
தாமரை

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ
பூமியே துரும்புங்கோ
வானமே தூசுங்கோ
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்கோ

ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
டாக்டருக்கு மருமகனா ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை
விடுமுறையில் இங்கே வந்துட்டதே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
செல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, கமல்ஹாசன்
வரிகள்:
தாமரை

பார்த்த முதல் நாளே

பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சாரியென்று சாரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
(காட்டி...)

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
(பார்த்த...)

படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, உன்னி மேனன்
வரிகள்:
தாமரை

எந்தன் உயிரே எந்தன் உயிரே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன்
என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அழுகவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யிறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம்
நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நானிருப்பேன்
கவலைகள் மறக்கவே
கவிதைகள் பிறக்கவே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை
நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பார்த்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மின்ன கேளி பண்ண
பக்கத்தில் நான் கிடைப்பேன்

கண்ணில் மீனை வச்சி
புத்தும் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்ல
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்
(எந்தன் உயிரே..)

படம்: உன்னருகே நானிருந்தால்
இசை: தேவா
பாடியவர்கள்: சித்ரா, கிருஷ்ணராஜ்
வரிகள்:
தாமரை

கள்ளி அடி கள்ளி

கள்ளி அடி கள்ளி
என்கே கண்டாய்
முதல்ல் என்ன கரைச்சாய்
உண்மை எல்லாம் சொல்லு

சிரித்திடும் வாவி கரையோரம்
காத்து நான் கிடந்தனன்
பதிங்கி மெல்ல வந்தவன்
பகுடி பகுடி என்ன போங்கடி

முழு நிலவு காயும்
நிலவில் மீன்கள் வாடும் தேன்நாடு
உன்னை இருந்து இங்கே
வாழ வாழ பெண்ணே நீ பாடு

நம்மை அணைக்க ஆளில்லை
என்று தனக்கு கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே
தமிழர் சொந்தம் நாம் என்னாளும்

ஓ.. நல்லூரின் விதியென்று
திரிந்தோமடி
தேரின் பின்னே
அலைந்தோமடி

கடலொன்று நடுவிலே
இள்ளை என்று கொல்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும்
ஒன்றுதான்

தமிழன் தமிழந்தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா?

நம்மது உறவெல்லாம் நம் நாட்டில்தான்
என்றும் நினைத்தோம் தவறாகத்தான்
இங்கும் உறவு உள்ளது
தமிழர் மனது பெரியது

அட உனக்கென்ன வந்த இடத்தில்
மருமகள் ஆவினான்..

ஏய் புதிய பாலம் கள்ளில் தெரிகிறதே

எந்த கலங்கமும் இல்லை என்று
ஆகுதே தெருடி வாழ்வாயே
(கள்ளி அடி கள்ளி...)

படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மதுமிதா
வரிகள்:
தாமரை

உன் சிரிப்பினில்

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதில் பாதியும் போக!
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய!

ம்… இன்று நேற்று என்றும் இல்லை
என் இந்த நிலை.
ம்… உன்னை கண்ட நாளிருந்தே
நான் செய்யும் பிழை.
(உன் சிரிப்பினில்..)

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்.
இதழின் விளிம்பு துலிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்.
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே!
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூழும் தீ!
(உன் சிரிப்பினில்..)

முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு!
உறக்கம் விழிப்பில் கனவாய்,
உன்னை காண்பதே வழக்கம் எனக்கு!
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்.
முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே!
(உன் சிரிப்பினில்..)

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கௌதமி ராவ், ரோப்பி
வரிகள்: தாமரை

மலர்களே மலர்களே மலரவேண்டாம்

மலர்களே மலர்களே மலரவேண்டாம்
உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை
ஓய்வெடுங்கள்
இன்று தோழனை அழைத்துவந்து
தேனை விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து
விருப்பம்போல வாழும் (மலர்களே)

ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே

சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி ( மலர்களே)

நீரோடு ஒரு காதல்
கடலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப்பார்க்க
மணல் வெளியில் நாள்முழுதும் கிடப்பேன்
புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.. (மலர்களே)


பாடலைப்பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலுக்கு இசையமைத்தவர்: யுவன்சங்கர்
திரைப்படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
பாடல் வரிகள் : தாமரை

காதலில் விழுந்தேன் - உனக்கென நான் எனக்கென நீ

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தாள்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறூப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: விஜய் ஆந்தோனி, ரம்யா
வரிகள்:
தாமரை

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்:
தாமரை

Mar 2, 2009

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே

ஆண்:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே (வெண்)

உலகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பது போல்
பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னசிஞ்சிறு மரகத மாற்றம் வந்தது
குறுகுறு மின்னல் என குறுக்கே ஓடுதே (வெண்)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவளம் ஒட்டிச்செல்ல (வெண்)

இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்க வைத்தாள் பேச வைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி

படம்:வேட்டையாடு விளையாடு (2006)
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: கௌதம்
நடிப்பு:கமல்ஹசன்,ஜோதிகா,கமலினி முகர்ஜி,பிரகாஷ்ராஜ்
பாடியவர்கள்:ஹரிகரன்,நகுல்,விஜய்
எழுதியவர்:தாமரை

Feb 18, 2009

ஒரு ஊரில் அழகே உருவாய்

She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

படம்: காக்க காக்க
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்:
தாமரை

கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)


பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

( கண்கள் இரண்டால் )

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)


படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்

Feb 17, 2009

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா

இந்த பாடலை, என் இனிய தோழி அனிதாவிற்கு சமர்பிக்கிறேன்.

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
(மல்லிகைப் பூவே..)

சின்ன சின்ன கைகளிலே ட்
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது?
நம்மை கண்டு நானி
இன்னும் கொஞ்ச தூரம்
தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு
தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
(மல்லிகைப் பூவே..)

அலைகள் வந்து மோதாமல்
கடலில் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே
பட்டு தென்றல் காற்று
இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை
காஞ்சி பட்டு நூலில்
கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது
எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
(மல்லிகைப் பூவே..)

படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
இயற்றியவர்:
தாமரை

கவிஞர் தாமரையின் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை

"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்" 10 ஆண்டுகளுக்கு முன்பாக கவிஞர் தமாரை தமிழ் இணைய சஞ்சிகையான ஆறாம் திணைக்கு வழங்கிய பேட்டியொன்றில் இப்படி தெரிவித்திருந்தார்.

கவிஞர் தமாரை

சூரியாவின் நடிப்பில் தற்போது உலகெங்கும் வெற்றி நடை போடும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தாமரை, இன்று தமிழகத்தின் முன்னணி திரை கவிஞர்களில் ஒருவர்.

கவிஞர் தாமரை தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் பொறியாளராகத் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் .

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்தின் 'மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே' பாடலின் மூலம் கவிஞர் தாமரை பிரபல்யம் பெற்றுக்கோண்டிருந்த சமயத்தில், ஆறாம் திணை தமிழ் இணைய சஞ்சிகையில் கவிஞர் தாமரையுடனான இப் பேட்டி பிரசுரிக்கப்பட்டது:

கே: திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றியது?

ப: பள்ளிநாட்களிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த செயல் புத்தகங்கள்வாசிப்பது தான். உண்பது, சுவாசிப்பது போல் வாசிப்பதும் ஆகிவிட்டது. அப்புறம் திரைப்படங்கள் பார்ப்பதும், திரைப்பாடல்கள் கேட்பதும் மகிழ்ச்சியான விஷயங்களாக இருந்தன. புத்தக வாசிப்பின் வெளிப்பாடுதான் நான் எழுத்தாளரானது. பாடல்கள் கேட்டதன் எதிரொலி திரைப்படப் பாடலாசிரியரானது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சில பாடல்களை நான் மெய்ம்மறந்து ரசித்த போது, '' நான் ரசிப்பது போல் மற்றவர்கள் என் பாடல்களை ரசிக்க வேண்டும்" என்ற ஆசை விதை மனதிற்குள் விழுந்தது. பிற்பாடு அது வளர்ந்து மரமானது.

கே: திரைப் படத்துறை இரும்புக் கோட்டைகள் கொண்டது. உள்ளே நுழைவது கடினம். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிந்து தான் வந்தீர்கள் என்றால் என்ன தைரியத்தில் வந்தீர்கள்?

ப: 'கடினம்' என்பதால் விரும்பிய விஷயத்தை அடைய முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்றெல்லாம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டால் வாழ்க்கையில் முயற்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. 'முயல்தல்' என்பது வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.

கே:ஆரம்ப நாள்களில் வாய்ப்பு கேட்டு என்னென்ன விதங்களில் முயற்சி செய்தீர்கள்? முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ப: அப்போது திரைத் துறையைப் பற்றி எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. பத்திரிகைத் தகவல்கள் தான் நான் அறிந்த திறையுலகம்.சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வாய்ப்புத் தேடி கோவையிலிருந்து முதல் முறையாக சென்னை வந்தேன்.சில பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் முகவரிகள் கையில் இருந்தன.ஒவ்வொருவர் வீடு, அலுவலகமாக சென்று சந்திக்க முயன்றேன். சிலரை சந்திக்கவும் செய்தேன். சொல்லி வைத்தாற் போல் எனக்குக் கிடைத்த பதில் 'பிறகு சொல்லி அனுப்புகிறோம்' என்பது தான்.

ஆனால் அறிமுகம் இல்லாத இந்த சென்னை நகரில் தனியாக ஹோட்டலில் தங்கிக் கொண்டு, ஒவ்வொருவராகச் சென்று பார்ப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. சென்னையிலேயே தங்கினாலொழிய வாய்ப்பு கிடைக்காது என்பதை, கோவை-சென்னை பயணக் காட்சி சில முறைகள் நிகழ்ந்த பிறகே நான்அறிந்து கொண்டேன். பொருளாதார சூழ்நிலையும், குடும்பச் சூழ்நிலையும் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் என் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு ஏமாற்றத்தோடு கோவைக்குத் திரும்பி விட்டேன். அதன் பிறகு இலக்கியத் துறையில் முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நிறைய எழுதினேன்.இவை நிறைய இலக்கியப் பரிசுகளை பெற்றுத் தந்தன.பத்திரிகை உலகில் என் பெயர் பிரபலமானது. இந்தக் கால கட்டத்தில் தான் நான் வென்ற பரிசுகள் வாங்க அடிக்கடி சென்னை வந்து போனதில் பல அறிமுகங்கள் கிடைத்தன.இப்போது முன்பு போல் சென்னைப் பயணம் மலைப்பாக இல்லை.

ஒரு முறை இசையமைப்பாளர் ஆதித்யனை சந்தித்த பொழுது அவருடைய 'தமிழ் பாப் பாடல்' ஒலி நாடாவிற்கு ஒரு பாடல் ஏழுத வாய்ப்புத் தந்தார். சந்தர்ப்பம் வரும் போது திரைப்படத்தில் எழுத வாய்ப்புத் தருவதாக சொல்லி இருந்தார்.

இந்த சமயத்தில் என் வாசக நண்பர் ஒருவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு எனக்குக் கடிதம் எழுதி நட்பைப் புதுப்பித்தார். அவரைக் கல்லூரி நாள்களிலிருந்தே கடிதம் மூலம் அறிவேன். என் படைப்புகளை விமர்சனம் செய்து எழுதுவார். அவர் வேலைநிமித்தம் இந்தியாவெங்கும் சுற்றி கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். மனோகர் என்ற அந்த நண்பரை பத்துவருடங்களாக அறிந்திருந்தும் நேரில் சந்தித்ததில்லை. அவர் தன்னுடைய திரைப்பட நண்பரான மோகனை சந்திக்குமாறு சொன்னார். நண்பர் மோகனை நான் சந்தித்த போது அவர் இயக்குநர் சீமானை எனக்கு அறிமுகம் செய்தார். சீமான் என் கவிதைகளைப் படித்து என்னைப் பெயரளவில் அறிந்திருந்தார். அப்போது 'இனியவளே' படம் ஆரம்பித்திருந்த நேரம். ஐந்து பாடல்கள் முடிந்து ஆறாவதாக ஒரு பாடல் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். மூன்று நாள்கள் கழித்து திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது. ''இந்தப் பாடலை நீங்கள் எழுதுங்கள்" என்று திடீரென்று அவர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை.

'தென்றல் எந்தன் நடையைக் கேட்டது
தத்தோம் தகதோம்' என்ற பாடலின் மூலம் இப்படித்தான் அறிமுகமானேன்.

கே:பொதுவாக சினிமாவின் எந்தத் துறையிலும் நுழைவதே கடினமானது. பெண்ணாய் இருந்து நுழைந்ததில் கூடுதல் சிரமம் இருந்ததா?

ப: பெண்ணாக இருப்பதால் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் எனக்கும் இருந்தது. பொதுவாக சினிமாவில் சேர வேண்டுமென்றால் ஆண்கள் அடுத்த இரயிலைப் பிடித்து சென்னை வந்து இறங்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை சென்னையிலேயே இருந்து முயற்சி செய்வார்கள். அப்படியெல்லாம் 'ஓடிவர' என்னால் இயலவில்லை. அவகாசம் கிடைக்கிற போதெல்லாம் சென்னை வந்து முயற்சி செய்வதும், திரும்பி செல்வதுமாக இருந்தேன். எனவே தான் என்னுடைய அறிமுகம் தாமதமானது. சென்னையிலேயே இருந்திருந்தேன் என்றால் நான்கு வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருப்பேன்.

கே:உங்கள் வீட்டில் யாரும் உங்கள் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

பொதுவான எதிர்ப்பு இருந்தது. காரணம் அச்சம் தான். கோவையை விட்டு தனித்து எங்கும் சென்று பழக்கமில்லாதவள் நான். சென்னைப் பயணம் என்பதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள் - இரயிலில் என் பெட்டியைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் எனக்கு இமயமலை சிகரத்தைத் தொட்ட களைப்பு ஏற்பட்டு விடும். என்னை சென்னை அழைத்து வரவோ, என்னுடன் தெருத்தெருவாக அலையவோ வீட்டில் யாரும் தயாராக இல்லை. ஆனால் எனக்கு வீட்டில் சிந்தனை சுதந்தரம் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நண்பர்களின் உதவி பெற்றே என் காரியத்தை சாதித்தேன். ஆக என் பிடிவாதம் தான் என் இன்றைய நிலைக்கு முதல் காரணம்.

கே:திரைப்படப் பாடலாசிரியராக இருக்க விசேஷ பயிற்சிகள் ஏதும் மேற்கொள்கிறீர்களா?

என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுக்கு என் சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடிப்பார்க்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுதான் நான் செய்த ஒரே பயிற்சி. பின்பு 'எழுச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு சட்டநிறுவனத்திற்காக ஆறு பாடல்கள் எழுதிய அனுபவம் பாடல்பதிவுத் தொழில் நுட்பத்தையும், நடைமுறையையும் அறிந்து கொள்ள உதவி செய்தது. திரு. ஆதித்யனிடம் எழுதிய போது என்னால் உடனுக்குடன் மெட்டுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அவ்வளவு தான். மற்றபடி விசேஷ பயிற்சி எதுவும் இல்லை.

கே:இங்கிருக்கிற மற்ற பாடலாசிரியர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

ப: பெரும்பாலும் எல்லோரையும் எனக்கு அறிமுகம் உண்டு. 'நல்ல நட்பு' என்று சொல்கிற அளவிற்கு யாரோடும் பழக்கமில்லை. கவிஞர் அறிவுமதியோடு மட்டும் நல்ல தொடர்பு உண்டு. இனிமையான, நல்ல சுபாவமுடைய அவரது நட்பு எனக்கு திரைத்துறையில் காலூன்ற நல்ல ஊக்கம் கொடுத்திருக்கிறது.

உங்கள் பாடலாசிரியர் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம்...

பொதுவான நிகழ்ச்சிகள் தாம்! குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த அசாதாரண நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

கே:உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

ப: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது குறைந்த பட்ச ஆசை! -லக்கியத் துறையில் என் பெயர் நிலைக்கும்படி நல்ல படைப்புகள் தர வேண்டும். திரைத் துறையைப் பொறுத்தவரை, 'வந்தார், போனார்' என்றில்லாமல் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் என் பெயரும் சேர வேண்டும்.

ஆனால் என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்.

கணவருக்கு மனைவியாகவும், திரைத்துறைக்கு பாடலாசிரியராகவும் ஒரே நேரத்தில் இருப்பது கடினமாயிற்றே.. எப்படி சமாளிக்கிறீர்கள்...

இப்படியும் சொல்லலாம் தன் குடும்பத்திற்காக கணவன்மார்கள் பல வருடங்கள் வெளிநாடு சென்று பணிபுரிவதில்லையா? அப்போதெல்லாம் மனைவிகள் கேள்வி கேட்காமல் அந்தப் பிரிவினைத் தாங்கிக் கொள்கிறார்களே! ஓர் ஆணிடம், ''ஒரே நேரத்தில் மனைவிக்குக் கணவனாகவும், பணியில் சிறந்த ஊழியராகவும் எப்படி இருக்க முடிகிறது?" என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவதொன்று வேண்டுமென்றால் இன்னொன்றை இழக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் - எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து சென்னையில் பாடல் எழுத வேண்டுமென்றால் அது எனக்கு ஒருவிதமான இழப்பு தான். ஆனால என் சிறு வயது கனவு நிறைவேறுகிறதே! 'Professional' பெண்கள் என்றால் கூடுதலாக இந்தச் சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

கவிஞர் தமாரை

கே:உங்களுக்குப் பிடித்த உங்களுடைய ஒரு கவிதை சொல்லுங்களேன்?

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...

சப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...

வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும், கடந்த
காலத்தையும், வந்து
அழைத்துப் போய் கலையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப் பாணத்துக் காரியாம்!

இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
''அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..." - தாமரை

அவ என்னை என்னை தேடி வந்தா அஞ்சல | வாரணம் ஆயிரம்

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா

அடங்கா குதிரைய போல அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்லை
அந்த சோழி சோழி போல புன்னகையால
எதுவோ எங்கள சேர்க்க இருக்கே கயித்துல கோர்க்க
ஒ கண்ணாமூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

வாழ்க்கை ராட்டினம் தான்டா தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொதல் நாள் உச்சத்தில் இருந்தேன் நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கெளப்பி தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் அம்மா வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா

தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே

படம் : வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: கார்த்திக், சூர்யா.

முன்தினம் பார்த்தேனே

ஹாய் மாலினி
அ யாம் கிருஷ்ணன்
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகா இருக்க
இங்கே எவனும் இவ்வளவு அழகா ஒரு...ஹா
இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டாங்க

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...

கோலார் தட்டில் உன்னை வைத்து
நிழல் செய்ய பொன்னை வைத்தால்
கோலாரும் தோற்க்காதா பேரழகே...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ....
வருகிறேன்....

ஓ... நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி...
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி....
விரலால் ஒரு கனவு நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக....
உள்ளமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
ஓ மை லவ்
உன்னை நான் பாராமல்
எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...

கடல் நீளம் அங்கு சேரும்
அலை வந்து தீண்டும் துரம்
மனம் சென்று பார்க்காதோ... ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்க்கப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்.... துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே....
உயிர் இரண்டும் உறையக்கண்டேன் நெருங்காமலே...
உனையின்றி எனக்கு ஏது எதிர்காலமே....

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

வெண்ணிலா....

வெண்ணிலா....


படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: முன்தினம் பார்த்தேனே
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை


Feb 16, 2009

வசீகரா... என் நெஞ்சினிக்க...

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் (வசீகரா)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே (வசீகரா)


திரைப்படம்: மின்னலே
வெளிவந்த வருடம்: 2000
இயற்றியவர்: தாமரை
பாடகி: பாம்பே ஜெயச்ரி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே

நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்