Mar 3, 2009

உன் சிரிப்பினில்

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதில் பாதியும் போக!
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய!

ம்… இன்று நேற்று என்றும் இல்லை
என் இந்த நிலை.
ம்… உன்னை கண்ட நாளிருந்தே
நான் செய்யும் பிழை.
(உன் சிரிப்பினில்..)

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்.
இதழின் விளிம்பு துலிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்.
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே!
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூழும் தீ!
(உன் சிரிப்பினில்..)

முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு!
உறக்கம் விழிப்பில் கனவாய்,
உன்னை காண்பதே வழக்கம் எனக்கு!
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்.
முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே!
(உன் சிரிப்பினில்..)

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கௌதமி ராவ், ரோப்பி
வரிகள்: தாமரை

மலர்களே மலர்களே மலரவேண்டாம்

மலர்களே மலர்களே மலரவேண்டாம்
உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை
ஓய்வெடுங்கள்
இன்று தோழனை அழைத்துவந்து
தேனை விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து
விருப்பம்போல வாழும் (மலர்களே)

ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே

சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி ( மலர்களே)

நீரோடு ஒரு காதல்
கடலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப்பார்க்க
மணல் வெளியில் நாள்முழுதும் கிடப்பேன்
புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.. (மலர்களே)


பாடலைப்பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலுக்கு இசையமைத்தவர்: யுவன்சங்கர்
திரைப்படம் : புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
பாடல் வரிகள் : தாமரை

காதலில் விழுந்தேன் - உனக்கென நான் எனக்கென நீ

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தாள்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறூப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: விஜய் ஆந்தோனி, ரம்யா
வரிகள்:
தாமரை

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்:
தாமரை

Mar 2, 2009

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே

ஆண்:
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே (வெண்)

உலகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பது போல்
பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னசிஞ்சிறு மரகத மாற்றம் வந்தது
குறுகுறு மின்னல் என குறுக்கே ஓடுதே (வெண்)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவளம் ஒட்டிச்செல்ல (வெண்)

இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி
நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்க வைத்தாள் பேச வைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி

படம்:வேட்டையாடு விளையாடு (2006)
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: கௌதம்
நடிப்பு:கமல்ஹசன்,ஜோதிகா,கமலினி முகர்ஜி,பிரகாஷ்ராஜ்
பாடியவர்கள்:ஹரிகரன்,நகுல்,விஜய்
எழுதியவர்:தாமரை